நடிகை ராதிகா வீட்டில் கொண்டாட்டம்.! மகிழ்ச்சியில் சரத்குமார்….!

பிரபல நடிகை ராதிகாவின் பேரனுக்கு ஒரு வயது நிரம்பி உள்ள நிலையில் அவரின் ட்விட்டர் பக்கத்தில் பேரனுக்கு உற்சாகத்துடன் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்துகொண்டிருப்பவர் நடிகை ராதிகா.

இவரது மகள் ரயனா. இவருக்கு வருடத்திற்கு முன்பு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தையின் பெயர் தாரக்.

இந்நிலையில் தாரக் பிறந்து இன்றோடு ஓராண்டு முடிவடைகிறது.அதனால் நடிகை ராதிகாவின் குடும்பம் அவரின் பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளனர்.

இதையடுத்து தனது பேரன் தாரக்கின் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் புகைப்படங்கள் மற்றும் பிறந்த நாள் வாழ்த்துகளை நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ந்து ரேயானின் குட்டி மகன் தரக்கிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: