இந்தியாவில் 500 ரூபாயில் ஆரம்பித்த சண்டை… இறுதியில் நிகழ்ந்த கோரச் சம்பவம்!

இந்தியாவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்துள்ள வடகுச்சிப்பாளையத்தில் வசித்து வந்தவர் தினேஷ்குமார்(24). இவர் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுபவராக வேலை செய்துவந்தார்.

இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு 7:30 மணிக்கு முனியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள முருகையன் என்பவரின் டீக்கடையில் டீ குடித்துள்ளார்.

தினேஷ் டீ குடித்துவிட்டு ரூ. 500 கொடுத்திருக்கிறார். ஆனால் சில்லரை இல்லையென்று முருகையன் கூறியுள்ளார். இதையடுத்து முருகையனுக்கும், தினேஷுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் எழுந்துள்ளது. பின்னர் கோபமடைந்த தினேஷ், முருகையனைத் தாக்கிவிட்டு, தடுக்கவந்த அவரது மனைவியையும் தக்கியுள்ளார்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தினேஷை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்தத் தாக்குதலில் காயம் அடைந்த முருகையன் மற்றும் அவரது மனைவி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த முருகையனின் மூத்த மகன் ஆகாஷ்(20) தன் நண்பர்களுடன் சேர்ந்து தினேஷ்குமாரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த தினேஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் போகும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரவாண்டி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்களையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: