மாவையும், சகோதரனும் ஏன் ஸ்டாலினை சந்தித்தார்கள்?

இந்தியாவில் நான்கு நாட்கள் தங்கியிருந்த தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இன்று நாடு திரும்பினார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றிற்காக மாவை சென்றிருந்தார். இதன்போது, ஜேர்மனியில் வசிக்கும் மாவை சேனாதிராசாவின் சகோதரரும் அங்கு வந்திருந்தார். தி.மு.க சட்டத்தரணி கே.எஸ்.இராதாகிருஸ்ணனின் ஏற்பாட்டில் அறிவாலயத்திற்கு சென்ற மாவை சகோதரர்கள், மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.

அன்றைய நாளில் எதிர்பாராத விதமாக அறிவாலயத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனையும் சந்தித்தார். பின்னர் கனிமொழியையும் சந்தித்தார்.

தி.மு.க சட்டத்தரணி கே.எஸ்.இராதாகிருஸ்ணன் இந்த சந்திப்புக்களை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். அண்மையில் யாழ்ப்பாணம் வந்த இராதாகிருஸ்ணனை, மாவிட்டபுரத்திலுள்ள தனது வீட்டிற்கு அழைத்த மாவை, விருந்தளித்திருந்தார். இந்த தொடர்பே, ஸ்டாலினுடனான சம்பிரதாய சந்திப்பில் முடிந்துள்ளது.

 

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: