மீண்டும் அம்மா வேடத்தில் ஸ்ரேயா!

சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை பிஸியாக இருந்த நடிகை ஸ்ரேயா, தற்சமயம் போதிய பட வாய்ப்பு இன்றி உள்ளார். தற்போது தமிழில் நரகாசூரன் படத்தை அடுத்து, சண்டக்காரி என்ற படத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. மேலும், தெலுங்கில் என்டிஆரின் கதாநாயகுடு படத்தை அடுத்து சந்திரசேகர் எலட்டி இயக்கும் புதிய படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். இந்தப்படத்தில் இவர் அம்மா வேடத்தில் நடிக்க உள்ளார்.

இதற்கு முன்பு தெலுங்கில் 2015ல் பவன்கல்யாண் நடித்த கோபாலா கோபாலா என்ற படத்தில் அம்மா வேடத்தில் நடித்த ஸ்ரேயா, மீண்டும் இந்த படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் பிரியா ஆனந்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: