கிழக்கு ஆளுநரின் புதிய அறிவிப்பு

எந்த ஒரு இனத்தை சார்ந்தும் தனது கடமைகளை மேற்கொள்ளப்போவதில்லை என புதிதாக நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணதின் புதிய ஆளுனராக பதவியேற்ற ஷான் விஜயலால் டி சில்வா திருகோணமலையில் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பெறுப்பேற்றார்.

இதனை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஆளுநர், “எந்த ஒரு இனத்தை சார்ந்து கடமையாற்றாமல் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் உயர்ந்த சேவையினை வழங்குவேன்.

மக்கள் பிரதிநிதிகள் இல்லாத மாகாண சபையை கொண்டு செல்வது என்பது ஆளுனர் என்ற ரீதியில் எனது பாரிய பொறுப்பாகும்” என தெரிவித்தார்.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா பதிவி விலகியதை தொடர்ந்து, மேல் மாகாண முதலமைச்சராக கடமையாற்றிய ஷான் விஜயலால் டி சில்வா புதிய ஆளுனராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: