ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மீண்டும் ரத்ன தேரர்!

முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான மட்டக்களப்பு ஷரிஆ பல்கலைக்கழகம் தெற்காசியாவின் மிகப்பெரிய இனவாத ஸ்தலமாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

ஷரிஆ பல்கலைக்கழகம் தொடர்பில் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்தித்தில் தேரர் இதனை கூறியுள்ளார்.

குறித்த பல்கலைக்கழகம் தெற்காசியாவில் மிகப்பெரிய ஷரிஆ சட்டம் மற்றும் இஸ்லாம் பயங்கரவாதம் கற்பிக்கும் இடம் என்றும், அந்த பல்லைக்கழகம் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்காக சவுதி உட்பட இஸ்லாமிய நாடுகளில் இருந்து பெருமளவு பணம் கிடைப்பது தங்களிற்கு தெரியும் என்றும் ,பங்களாதேஷ் பௌத்த துறவிகளால் நடத்தப்பட்டு வந்த நாடு என்றும் . எனினும், தற்போது அது முழுமையான முஸ்லிம் நாடாக மாறியுள்ளதாகவும் , அவ்வாறே இலங்கையையும் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று தீவிரவாதிகள் ஆயுதத்தை விட தொழில்நுட்பத்தையே அதிகம் பயன்படுத்துவதாகவும், சைபர் யுத்தமே இன்று அதிகரித்து காணப்படுகின்றதாகவும், மட்டக்களப்பு ஷரிஅ பல்கலைக்கழம், இராணுவத்தினருக்கு தொழில்நுட்ப திறனை வழங்கும் பல்கலைக்கழமாக மாற்றுமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த யோசனைக்கு யாரிடம் அனுமதி பெறுவது என்பதனை பின்பு பார்ப்போம் என்றும், முதலில் அதனை உடனடியாக அரசாங்கத்திற்கு எடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தேரர் கூறியுள்ளார்.

அதற்காக யோசனை, சட்டமூலம் அனைத்தும் எதிர்வரும் 10 நாட்களுக்குள் முன்னெடுக்கப்படும் எனவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த வாரம் தேரரின் உண்ணாவிரத அழுத்தம் காரணமாக ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரின் பதவிகளை ஜனாதிபதி பறித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: