இந்திய கடற்படையால், கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 30 பேரை விடுதலை செய்யத் தீர்மானம்

இந்திய கடற்படையால், கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 30 பேரை விடுதலை செய்யத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனை மீன்பிடி திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் பத்மபிரிய திசேரா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்த நிலையில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்னும் சில தினங்களில் குறித்த இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்களென்றும் அவர் தெரிவித்துள்ளார்

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: