கழிவறைக்கு சென்று மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்த மர்ம கும்பல்..!!!!

அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் கழிவறைக்கு செல்லும் பெண்களை ஒரு கும்பல் மொபைல் போனில் ஆபாசமாக படம் எடுத்ததாக கூறி அரசுப் பள்ளியில் உறவினர்கள் ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இயங்கி வருகிறது கிருஷ்ணவேணி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி. இந்த பள்ளியில் சுமார் 1500கும் மேற்பட்டவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் சுற்றுசுவர் இல்லாததால் கழிவறைக்கு செல்லும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது பெற்றோர்களின் பல மாத குற்றச்சாட்டு.

மர்ம ஆசாமிகள்

இந்நிலையில், மாணவிகள் கழிவறைக்கு சென்றபோது முகமூடி அணிந்த 4 பேர் ஆபாச வீடியோ போட்டோ எடுத்துள்ளனர். இதைப் பார்த்த மாணவி கூச்சலிட்டதால் கத்தியை காட்டி மிரட்டியதால் அந்த மாணவி அங்கேயே மயக்கம் போட்டு கீழே விழுந்ததாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து அருகே உள்ள சகமாணவிகள் ஆசிரியருக்கு புகார் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் கேட்டு கொதிப்படைந்த அந்த ஊர் பொதுமக்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பள்ளிக்கூடத்துக்கு சுற்றுசுவர் எழுப்புவதோடு கண்காணிப்பு கேமரா பொருத்தி மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர். அப்போது சில மாணவிகள் சில ஆசாமிகள் தொந்தரவு செய்வதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது…

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: