யோகா என்றால் என்ன? இந்தியாவிலும் யோகாவிற்கான முக்கியத்துவம் என்ன? அந்த வார்த்தை எங்கிருந்து வந்தது தெரியுமா? இதோ?

வரும் ஜூன் 21ல் உலகம் முழுவதும் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.  இந்தியாவிலும் யோகாவிற்கான முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டு பல்வேறு இடங்களில் யோகா தினத்தன்று மக்கள் கூட்டமாக சேர்ந்து யோகா செய்து வருவதும் வழக்கம்.

யோகா என்றால் என்ன? 

யுஜ் என்னும் சமஸ்கிருத வார்த்தையில் இருந்து வந்ததே யோகா.  யோகா என்ற சொல்லுக்கு தனிப்பட்டவரின் நனவு நிலை அல்லது ஆன்மா பிரபஞ்ச சக்தியுடன் இணைதல் என்று அர்த்தம்.

இந்தியாவைப் பொறுத்தவரை யோகா என்பது புதிதல்ல.  5 ஆயிரம் ஆண்டு பழமையான ஒன்று.  யோகா என்பதை பலர் உடல் வளைதல், திரும்புதல், நீட்டுதல், மூச்சினை இழுத்து விடுதல் என சிக்கலான உடற்பயிற்சி என்று நினைத்து உள்ளனர்.

ஆனால் யோகா என்பது நமது உள்ளிருக்கும் மனித மனதின் ஆன்மாவின் எல்லையற்ற சக்தியை திறந்து அதன் திறனை அதிகரிக்கும் ஆழமான அறிவியலே இந்த யோகா.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: