ஏலத்திற்கு வந்தது விஜயகாந்த் சொத்து

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் சொத்துக்கள் ஏலத்துக்கு வருவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது.

விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா இணைந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 5,52,73,825 ரூபா கடன் பெற்றுள்ளனர். இதற்கான அசல் மற்றும் வட்டியை அவர்கள் செலுத்தவில்லை. இதனால் வங்கி சட்டத்தின் படி விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதாவிற்கு சொந்தமான சொத்துக்களை, வரும் ஜூலை 26ம் திகதி ஏலம் விட இருப்பதாக வங்கி அறிவித்துள்ளது.

இதற்கான விஜயகாந்த்தின் சாலிகிராமம் வீடு, ஆண்டாள் அழகர் கல்லூரி மற்றும் அது சார்ந்த டிரெஸ்ட்கள் மற்றும் இவருக்கு சொந்தமான இன்னும் பல சொத்துக்கள் இந்த ஏல பட்டியலில் உள்ளது. மொத்தமாக ரூ.100 கோடி அளவுக்கு ஏல தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த்தின் சொத்துக்கள் ஏலத்துக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருப்பது திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: