பிரதமர் ரணில் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!!!

பதில் அமைச்சர்கள் மூவரையும் தனக்கு தெரியாமல் அமைச்சரவை கூட்டங்களில் கலந்துகொள்ளக்கூடாது என பிரதமர் ரணில் கண்டிப்பான உத்தரவிட்டுள்ளார். லக்கி ஜெயவர்தன, அனோமா கமகே மற்றும் புத்திக பத்திரன ஆகியோருக்கே ரணில் இந்த உத்தரவை இட்டுள்ளார்..

இராஜினாமா செய்த மூன்று முஸ்லிம் அமைச்சர்கள் ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம் ஆகியோருக்காக பதில் அமைச்சர்கள் ஜூன் 10 அன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.

அதன்படி, நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி பதில் அமைச்சராக லக்கி ஜெயவர்தன நியமிக்கப்பட்டார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராகவும், நீடித்த இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றவும், கூட்டுறவு மேம்பாடு மற்றும் தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் பதில் அமைச்சராக புத்திக பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார்.

நெடுஞ்சாலை மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் பெட்ரோலிய வள மேம்பாட்டு பதில் அமைச்சராக அனோமா கமகே நியமிக்கப்பட்டார்.

பதில் அமைச்சர்களை நியமிப்பது தொடர்பாக பிரதமருடன் கலந்தாலோசிக்காமலே ஜனாதிபதி முடிவெடுத்தார். மேலும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களு நியமனங்களை வழங்குவதற்கு முன்னர்ரும் பிரதமருக்கு அறிவிக்கப்படவில்லை.

பிரதமர் பரிந்துரைத்த பெயர்களும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: