வெங்காய வெடியை பாவித்து மனைவியை கொன்ற கணவன்!

வவுனியா செட்டிகுளம் கங்கங்குளம் கிராமத்தில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கங்கங்குளத்தில் வசித்து வந்த ர.அந்தோணியம்மா என்ற நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இக் கொலைக்கும் கணவனுக்கும் தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீண்ட நாட்களாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அண்மைக்காலமாக மனைவி கங்கங்குளத்தில் தனியாக வீடொன்றில் வசித்து வந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

கணவனால் வெங்காய வெடி என தெரிவிக்கப்படும் உள்ளுரில் மிருகங்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தும் வெடியினை பயன்படுத்தியே மனைவியை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: