இன்றைய (23.06.2019) சிறப்புப் பலன்

2019 ஜுன் 23ஆம் திகதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன். இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய மைத்துக்கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வியாபாரத்தில் புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.

ரிஷபம்: மற்றவர்களால் செய்யமுடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக்காட்டுவீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. திடீர் சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சாதித்துக் காட்டும் நாள்.

மிதுனம்: உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கூச்சல், குழப்பம் விலகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில்
சிறப்பாக தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

கடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

சிம்மம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத்தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப்பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக்கொள்வீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். எதிர்பாராத நன்மைகள் கிட்டும் நாள்.

கன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். திடீர் யோகம் கிட்டும் நாள்.

துலாம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் ஆதரவுப்பெருகும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மனதில் நிறைவு பெறும் நாள்.

விருச்சிகம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில்கவனம் தேவை. பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள்.பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புது அனுபவமும் உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சகஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் விலகும் நாள்

தனுசு: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளு வீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். வெற்றி பெறும் நாள்.

மகரம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தள்ளிப் போனவிஷயங்கள் உடனே முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்

கும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சந்தேகப்படு வதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும்.சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.மீனம்

மீனம்: எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். சிலர்உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்கா தீர்கள். சகோதரங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவு
கள் இருக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: