வவுனியா செட்டிக் குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெங்காய வெடி மூலம் கொடூரமாக கொலை கணவன்!

வவுனியா செட்டிக் குளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெங்காய வெடி மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

40 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான ரவிச்சந்திரன் அந்தோனியம்மா என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மிருகங்களை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் வெங்காய வெடி என அழைக்கப்படும் வெடிபொருள் மூலமே குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வெடியினை அவரது தலைப்பகுதியில் வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் சடலத்தினை நேற்று முன்தினம் பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.

இக் கொலை தொடர்பாக குறித்த பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ள நிலையில் செட்டிக்குளம் பொலிஸார் நேற்றைய தினம் மோப்பநாயின் உதவியுடன் வீட்டிற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் சந்தேகநபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த பெண் வெங்காய வெடி மூலம் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் குறித்த கொலையாளி அந்த வெடிபொருள் மூலம் படுகாயமடைந்த நிலையிலேயே தப்பியோடியுள்ளார் என்று செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக முரண்பாடு காணப்பட்டதாகவும் தெரியவருகிறது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: