கல்முனை உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது!

கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் கோரிக்கையை முன்வைத்து மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

மதத்தலைவர்களும் அரசியல் தலைவர்களும் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாகவும், தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் மீண்டும் சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தில் இறங்குவோமென்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமான இப்போராட்டத்திற்கு பௌத்த இந்து கிருஸ்த்தவ மதத் தலைவர்கள் தமிழ் சிங்கள அரசியல் பிரதிநிதிகள் பொது அமைப்புக்கள் பல மாவட்டங்களின் பொது மக்கள் ஆதரவை வழங்கியிருந்தனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: