பேஸ்புக் நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்!

பேஸ்புக் நிறுவனம் தமது இலங்கை வாடிக்கையாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வன்முறைகள் மற்றும் குரோத செயற்பாடுகளை தடுக்கும் நோக்கிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மெஸென்ஜர் செயலியூடாக பகிரப்படும் ஒரு விடயத்தை, ஐந்து பேருக்கு மாத்திரமே பகிர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த கட்டுப்பாடு மியன்மாரிலும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: