பேஸ்புக்கில் வெறுப்புணர்வு பேச்சை கண்காணிக்க தனிப்பிரிவு!

பேஸ்புக்கில் வெறுக்கத்தக்க பேச்சைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் ஒரு சிறப்பு பிரிவை அமைத்துள்ளது என்று இலங்கை மொழிபெயர்ப்பு சமூக நிறுவனர் யாசிரு குருவிட்டகே தெரிவித்தார்.

பேஸ்புக்கில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க பேச்சு பரவுவதால் அரசாங்கம் சமீபத்தில் சமூக ஊடக தளங்களை தடுக்க வேண்டியிருந்தது என்பதால் இந்த சிறப்பு பிரிவு நிறுவப்பட்டது.

பேஸ்புக் தரங்களை மீறும் கணக்குகளை அகற்றுவதன் மூலமும், வகுப்புவாத பதட்டங்களைத் தூண்டும் உள்ளடக்கத்தை அடையாளம் கண்டு அகற்றுவதன் மூலமும் வெறுப்புணர்வை எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பிரிவுக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டில் வன்முறையைத் தூண்டக்கூடிய பொருள்களைப் பற்றி பயனர்களுக்குக் கற்பிக்கும் பொறுப்பும்ம் இந்த பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: