இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு இருக்கிறதா?

இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற அடுத்துவரும் 2 போட்டிகளிலும் கட்டாய வெற்றி தேவை என்ற நிலையில் அந்த 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்தாலும் அரையிறுதிக்கு தகுதி பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலகக்கிண்ணப் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதியில் முதல் 4 இடங்களில் பிடிப்பது யார் என்ற கடும் போட்டி எழுந்துள்ளது. அவுஸ்திரேலிய அணி 7 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

இந்திய அணி 6 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 11 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நியூஸிலாந்து அணி 7 போட்டிகளில் 5 வெற்றிகள், ஒருதோல்வி என 11 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது.

இங்கிலாந்து அணி 7 போட்டிகளில் 3 தோல்விகள், 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. இப்போது, பிரச்சினை அனைத்தும் 4வது இடத்தை பிடிக்கும் அணிக்குத்தான் போட்டி இருக்கிறது.

இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை இன்னும் இந்தியா, நியூஸிலாந்து அணிகளுடன் மோத உள்ளது. இரு போட்டிகளும் கடுமையாக இருக்கும், எளிதாக வெற்றி பெற முடியாது என்ற நிலை இருக்ிறது.

அதேசமயம் பாகிஸ்தான் அணி 7 போட்டிகளில் 3 வெற்றிகள் 3 தோல்விகளுடன் இருக்கிறது. இன்னும் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளுடன் மட்டும் மோத இருப்பதால், ஒருவேளை இரு போட்டிகளிலும் வென்றுவிட்டாலும் இங்கிலாந்துக்கு கடும் போட்டியாக அமையும்.

அதேபோல பங்களாதேஷ்க்கு இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் மோத இருக்கிறது. இரு போட்டிகளில் ஒரு போட்டியில் வென்றால்கூட 9 புள்ளிகளுடன் வங்கதேசமும் அரையிறுதிக்கு போட்டியிடக்கூடும்.

அதேபோல இலங்கை அணி 6 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 6 புள்ளிகளுடன் இருக்கிறது. அடுத்துவரும் 3 போட்டிகளில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும்.

இந்நிலையில், சில கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் அரையிறுதிக்கு யார் செல்ல முடியும் என்ற தெளிவு கிடைக்கும்.

அவுஸ்திரேலிய அணி உறுதியாக அரையிறுதிக்கு செல்ல முடியுமா?

ஆம், அவுஸ்திரேலிய அணி அரையிறுதிக்குச் சென்றுவிடும். அவுஸ்திரேலிய அடுத்துவரும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் வென்றுவிடும், ஆனால், நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவுஸ்திரேலியா வென்றால் 16 புள்ளிகளையும் தோற்றால் 14 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இங்கிலாந்து அணி தகுதி பெற என்ன தேவை?

இங்கிலாந்து அணிக்கு இன்னும் இரு ஆட்டங்கள் இருக்கின்றன. இரு ஆட்டங்களில் வென்றால் அரையிறுதிக்கான வாய்ப்பு அதிகரிக்கும். 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் கிடைக்கும். ஆனால், ஒரு போட்டியில் தோற்றாலும் அதாவது நியூஸிலாந்து அல்லது இந்தியா ஆகிய இருஅணிகளில் ஒரு அணியிடம் தோற்றாலும் அதன் நிலைமை கேள்விக்குறிதான்.

அதாவது 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெறும். அதேசமயம், மற்ற அணிகளான இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகளின் வெற்றி, தோல்வியை எதிர்பார்த்திருக்க வேண்டியது இருக்கும். எந்த அணியும் 10 புள்ளிகளுக்கு மேல் செல்லாமல் இருக்கவேண்டும்.

இங்கிலாந்து பெறும் 5 வெற்றிகளே அரையிறுதிக்குள் 4வது இடத்துக்கு போதுமானது. ஆனால் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் தங்களின் அடுத்த ஒருபோட்டியில் தோற்றால் இங்கிலாந்தின் 5 வெற்றிகள் 10 புள்ளிகள் கணக்கீடு சரியாக வரும்.

ஒருவேளை இலங்கை அணியும், இங்கிலாந்து அணியும் 10 புள்ளிகள் பெற்றி டைபிரேக்கர் வந்தால், யார் அதிகமான வெற்றிகள் பெற்ற கணக்கீடு எடுக்கும்போது, இங்கிலாந்து அணி 5 வெற்றிகள் பெற்றதால் வாய்ப்பு அந்த அணிக்கு வழங்கப்படும்.

பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் 9 புள்ளிகளுடன் நின்றுவிடும். அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்குள் செல்லும்.

ஒருவேளை ஆசிய அணிகளில் ஒரு அணி தங்களின் மீதமிருக்கும் அனைத்துப் போட்டிகளை வென்றாலும் இங்கிலாந்து அணிக்குச் சிக்கலாக முடியும்.

இங்கிலாந்து மீதமுள்ள 2 ஆட்டங்களில் தோற்றாலும் அரையிறுதிக்கு செல்லுமா?

இது சிறிது நம்ப முடியாத நிகழ்வாகத்தான் இருக்கும். ஆனால் இதுபோன்று நடக்க மிகக்குறைவான வாய்ப்புகளே இருக்கின்றன. பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் மீதமுள்ள 2 ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் தோற்க வேண்டும். இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் மழையால் ரத்தானால் 8 புள்ளிகளுடன் மூன்று அணிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது அதிகமான வெற்றிகள் என கணக்கெடுக்கும்போது இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதிபெறும். இது நடப்பதற்கு சாத்தியங்கள் மழையின் கைகளில் மட்டுமே இருக்கிறது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: