உலகின் பிரபலமான சர்க்கஸ் பயிற்சியாளரை கடித்துக்கொன்று சடலத்துடன் விளையாடிய புலிகள்

இத்தாலியில் சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றிற்கு தயாராகி கொண்டிருந்த உலகின் மிகப்பிரபலமான சர்க்கஸ் பயிற்சியாளரை அவருடைய புலிகளே கடித்து கொன்றுள்ளன.
உலகளவில் மிகவும் பிரபலமான சர்க்கஸ் பயிற்சியாளர் எட்டோர் வெபர் (61), வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் இத்தாலியின் பாரிக்கு அருகிலுள்ள கிராமப்புறங்களில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்துவதற்கு தயாராக இருந்தார்.
அதற்கு முன்பாக அவர் தன்னுடைய புலிகளுடன் ஒத்திகை நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு புலி திடீரென அவரை தாக்கியுள்ளது.
இதனை பார்த்த மற்ற மூன்று புலிகளும் அவர் மீது தாக்குதல் நடத்தி கொன்றன. இதற்கிடையில் அங்கு வந்த மருத்துவ ஊழியர்கள் எதுவுமே செய்ய இயலாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றுள்ளனர்.
இறந்த அவருடைய சடலத்துடன் அந்த 4 புலிகளும் சுமார் 30 நிமிடம் வரை விளையாடிக்கொண்டிருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வெபரின் சக கலைஞர்களும் அந்த புலிகளை விரட்ட முயன்று அது தோல்வியில் முடிந்திருக்கிறது. இந்த நிலையில் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புலிகளின் பயிற்சியாளர் இறந்துவிட்டதால் அந்த புலிகள் என்னவாகும் என்பது குறித்த தகவலும் தெரியவில்லை.
- Previous திருமண ஆசை காட்டி இளம்பெண்ணுடன் உல்லாசம்! போராட்டத்தில் குதித்த காதலி
- Next எதிர்பார்த்தோம்! ஏமாந்தோம்! மீண்டும் போர்! அன்றைய அதே பல்லவி இதோ ஆரம்பம்!
You may also like...
Sorry - Comments are closed