எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் தரைமட்டமான உணவகம்: 21 பேர் காயம்

புளோரிடா மாகாணத்தில் எரிவாயு சிலிண்டர் விபத்து ஏற்பட்டதில் 21 பேர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் புரோவர்ட் கவுண்டியில் உள்ள ஷாப்பிங் சென்டரில் ஆள் இல்லாத உணவகம் ஒன்றில் சனிக்கிழமை காலை எரிவாயு சிலிண்டர் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் 21 பேர் காயமடைந்துள்ளதாகவும், 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், நங்கள் அதனை முதலில் ஒரு இடி சத்தம் என்று தான் நினைத்தோம்.ஆனால் அதன்பிறகு கட்டிடங்கள் குலுங்குவதை பார்த்து தான் நிலைமையை உணர்ந்தோம்.

அந்த சம்பவத்தால் கட்டிடத்தில் உலோக சட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே தப்பியது. அருகாமையில் இருந்த உடற்பயிற்சி கூடம் முதற்கொண்டு அனைத்தும் நாசமாகியுள்ளன என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: