மன்னாரில் படகுக்குத் தீவைத்த விசமிகள்!

மன்னாா்- பேசாலை கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகும் படகு நிறுத்துவதற்கான கொட்டிலும் விஷமிகளால் தீயிட்டு எாிக்கப்பட்டுள்ளது.

பேசாலை 7 ஆம் வட்டார பகுதியைச் சேர்ந்த மீனவரது படகு, ஒரு தொகுதி வலைகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கொட்டில் மற்றும் படகு திடீர் எனத் தீப்பற்றி எரிந்துள்ளது. தீப்பற்றியதை கண்டவர்கள் தீயை அணைக்க முற்பட்டனர்.

கடற்படையினர் மற்றும் பேசாலை பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மேலதிக விசாரனைகளை மேற்கொண்டனர்.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: