தீயாய் பரவும் லொஸ்லியா புகைப்படம்! இப்படியா இவர்

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3வது சீசன் துவங்கி சுமார் 4-5 நாட்களிலேயே வீட்டில் பூகம்பங்கள் வெடிக்க துவங்கியது. வீட்டில் உள்ளவர்கள் கேமராவை மறந்து சண்டைகள் போட துவங்கிவிட்டனர்.

ஆதனால் ஒவ்வொருவரின் குணமும் வெளிப்பட துவங்கிய நிலையில் மக்களுக்கு மிகவும் பிடித்தது இலங்கை லாஸ்லியாவின் குணம் தான்.

முதல் சீசனில் எப்படி ஓவியாவிற்கு ஒரு ரசிகர் பட்டாளர் சேர்ந்ததோ அதே போன்ற பட்டாளம் தான் தற்போது லாஸ்லியாவிற்கும் சேர்ந்துள்ளது. அந்தவகையில் சமூகவலைதளங்களில் லாஸ்லியா ஆர்மி என்ற ஹேஷ்டேக் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

தற்போது லொஸ்லியா ஆர்மியில் அவர் பள்ளிப்பருவத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ள நிலையில் , தந்தையுடன் லொஸ்லியா என்ற புகைப்படம் ஒன்றும் தற்போது வைரலாகி வருகின்றது.

10 ஆண்டுகளாக தனது தந்தையை பிரிந்து சோகத்தில் தவிக்கும் லொஸ்லியாவின் தந்தை உண்மையிலேயே இவர்தானா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது

ஆனால் இப்புகைப்படத்தில் உள்ளவர் லொஸ்லியாவின் தந்தை இல்லை என்றும், இவரது பெயர் காண்டீபன் என்பதும், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவரை லொஸ்லியாவின் தந்தை என தவறாக கூறியவர்களுக்கு லொஸ்லியா ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: