பாராளுமன்றம் மீது தாக்குதல்? போலித் தகவல் வழங்கியவரிடம் விசாரணை ஆரம்பம்

பாராளுமன்றுக்கு குண்டு வைக்க புறக்கோட்டை பகுதியில் பள்ளிவாசல் ஒன்றில் கூடி 8 பேர் சேர்ந்து சதி செய்துள்ளதாக 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு பொய்யான தகவல்களை வழங்கிய ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

எல்ல பொலிஸ் பிரிவில் வைத்து புறக்கோட்டை, எல்ல, கொழும்பு மத்திய சட்ட அமுலாக்கல் பிரிவு மற்றும் தேசிய உளவுத் துறை இணைந்து முன்னெடுத்த விஷேட நடவடிக்கையின்போதே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதன்போது குறித்த பொய்யான தகவலை வழங்க பயன்படுத்திய சிம் அட்டை மற்றும் தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றியதாகவும் தற்போது குறித்த சந்தேக நபரை புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து அவசரகால சட்ட விதிகளின் கீழ் விசாரித்து வருவதாகவும் பொலிஸ் அத்தியட்சர் குணசேகர மேலும் சுட்டிக்காட்டினார்.

பொரளை பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய முஸ்லிம் நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருபவராவார்.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: