வெளியூரில் இருந்து வேலை முடிந்து திடீரென ஊருக்கு வந்த கணவன்!

வெளியூரில் வேலை செய்து வந்த கணவன் உள்ளூருக்கு வந்து மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் திருவாரூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (45). இவர் மனைவி அமராவதி (40).

கூலி தொழிலாளியான செந்தில்குமார் கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் திடீரென சொந்த ஊருக்கு வந்த நிலையில் மனைவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அமராவதிக்கும், செந்தில்குமாருக்கும் நேற்று சண்டை நடந்தது.

அப்போது ஆத்திரமடைந்த செந்தில்குமார், தனது மனைவி அமராவதி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு ஓடி விட்டார்.

இதில் உடல் முழுவதும் தீ பரவியதில் வெப்பம் தாங்க முடியாமல் அமராவதி கத்தி கதறினார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அமராவதியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி அமராவதி பரிதாபமாக இறந்தார்.

அமராவதி இறந்த தகவல் அறிந்த செந்தில்குமார், பொலிசாருக்கு பயந்து வீட்டுக்கு அருகே உள்ள வேப்பமரத்தில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: