அழகான அவள் என்னை விட்டு சென்றுவிடுவாள் என பயந்தே இப்படி செய்தேன்!

இந்தியாவில் அழகான காதலி தன்னை விட்டு வேறு ஆணுடன் போய் விடுவாளோ என்ற சந்தேகத்தில் அவரை கொடூரமாக கொலை செய்த காதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாக்பூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் முகம் முழுவதும் சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பொலிசார் விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் குஷி பரிகார் என்று தெரியவந்தது.

கல்லூரி மாணவியான குஷி மொடலாக உள்ளதோடு, உள்ளூர் பேஷன் ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் குஷியும் அஷ்ரப் ஷேக் என்ற இளைஞரும் காதலித்து வந்தனர்.

இதனால் பொலிசாருக்கு அஷ்ரப் மீது சந்தேகம் ஏற்பட அவரை பிடித்து விசாரித்ததில் குஷியை கொன்றதை ஒப்பு கொண்டார்.

இதையடுத்து பொலிசார் அஷ்ரப்பை கைது செய்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், குஷி பார்ட்டிக்கு செல்வதில் தொடங்கி, செல்போனில் சாட்டிங் செய்வது வரை அவரது நடவடிக்கைகள் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின.

அழகான குஷி என்னை விட்டு வேறு நபருடன் சென்றுவிடுவாள் என பயந்தேன்.

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நாங்கள் இருவரும் மது குடித்த பின்னர் அவள் பிற ஆண்களுடன் பேசியதை பார்த்து எனக்கு கோபம் வந்தது.

பின்னர் காரில் ஏற்பட்ட சண்டையில் நான் மறைத்து வைத்திருந்த மண்வெட்டியை வைத்து அவள் முகத்தில் பலமாக அடித்து கொன்றேன், பின்னர் சடலத்தை சாலை ஓரத்தில் உள்ள புதரில் வீசி விட்டு சென்றேன் என்று கூறியுள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: