நடிகர் விவேக்கின் தாயார் காலமானார்!

தமிழ் திரைப்பட உலகின் சிறப்பான நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் விவேக். இவரது நகைச்சுவை இலஞ்சம்,மக்கள்தொகைப் பெருக்கம்,அரசியல் ஊழல்கள்,மூட நம்பிக்கை போன்றவற்றை எடுத்துரைப்பதால் இவரை சிலர் ‘சின்னக் கலைவாணர்’என்றும்,‘மக்களின் கலைஞர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

1990ம் ஆண்டின் தொடக்கத்தில் துணைநடிகராக தமிழ் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர், தற்போது புகழ்பெற்ற நடிகராக உள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார்.

சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும்,இவர் பேசும் இரட்டை பொருள் பொதிந்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு.

விவேக்கின் சொந்த ஊர் மதுரை ஆகும். அங்கையா பாண்டியன் – மணியம்மாள் ஆகியோர் இவரது பெற்றோர் ஆவர். விவேக்கின் தாயார் மணியம்மாள்(86), சென்னையில் வசித்து வந்தார்.

இவர் மாரடைப்பின் காரணமாக இன்று காலமானார்.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: