இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தற்போது பாகிஸ்தானில்

பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் கஞ்சிபான இம்ரானின் கீழ் இயங்கிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தற்போது பாகிஸ்தானில் இயங்கி வருவதாக புலனாய்வு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

அண்மைய வாரங்களில் பாகிஸ்தான் ஊடாகவே இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் டுபாயில் கஞ்சிபான இம்ரான் உள்ளிட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல் தாதாக்கள் மடக்கப்பட்ட பின்னர், டுபாயில் இயங்கிய போதைப்பொருள் வலையமைப்புக்கள் தலைமறைவாகியுள்ளன.

தற்போது, அந்த வலையமைப்புக்கள் பாகிஸ்தானை மையமாக வைத்து தீவிரமாக இயங்கி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையிலிருந்து தப்பிச் சென்று பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்த காலத்திலும், கஞ்சிபான இம்ரான் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டது விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: