ஈபிடிபி கைவிடுகின்றது?

மாநகர முதல்வா் இமானுவேல் ஆனல்டிற்கு எதிராக நம்பிக்கையில்ல தீா்மானம் ஒன்றை நிறைவேற்ற முனைப்பு காட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்படி 26 உறுப்பினா்கள் தப்போது ஆதரவு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் ஈபிடிபி இன்று மதியம் ஊடகங்களிற்கு வெளிப்படுத்த யாழ்.ஊடக அமையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்துகின்றது.

யாழ்.மாநகரசபையினால் சிமாட் போல் கம்பம் அமைக்கப்பட்டுவரும் விவகாரம் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. சிமாட் போல் கம்பங்களில் 5G பொருத்தப்படவுள்ளதாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில் சிமாட் போல் கம்பங்கள் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்தக் கோரி, மாநகர முதல்வரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.பொது மக்கள் அணிதிரண்டு, மாநகர முதல்வரின் அலுவலகம் மற்றும் சபை வாயிலை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் சார்ந்த அமைப்புக்கள், பொது மக்கள் எனப் பலரும், கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டனர்.

அதன்போது மக்களுக்கு ஆதரவாக யாழ் மாநகர சபையின் அமர்வைப் புறக்கணித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈபிடிபி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 26 உறுப்பினர்கள், மக்களோடு போராட்டத்தில் இணைந்திருந்தனர்.

அதன்போது “யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளரின் ஒப்புதலின்றி, சிமாட் போல் கம்பங்கள் அமைக்கும் பணியில் மாநகர முதல்வர் தன்னிச்சையாக செயற்படுகின்றார் என மக்களால் சுட்டிக்காட்டப்பட்டதோடு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நேரில் வந்து சந்திக்க

ஆர்னோல்ட் மறுத்து விரும்பினால் ஐந்து பேர் மட்டும் அலுவலகத்திற்குள் வந்து தன்னைச் சந்திக்குமாறு கூறியமையும் உறுப்பினர்களிடம் சுட்டிக்காட்டப்பட்டது.இதனையடுத்து 26 உறுப்பினர்கள் மக்களுக்கு ஆதரவாக உள்ள நிலையில்

தமது கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான 15 உறுப்பினர்களின் ஆதரவோடு அவர் யாழ் மாநகர முதல்வர் தன்னிச்சையாக செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்னும் எனவே அடுத்த அமர்விற்கிடையில்

பொருத்தப்பட்ட சிமாட் போல் கம்பங்களை மீள எடுக்காவிட்டால் ஆர்னோல்ட்டிற்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் இணைந்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உத்தேசித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும் இரு உறுப்பினர்கள் சிமாட் போல் கம்பங்களை அமைப்பதற்கு கடுமையாக எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். முன்னரும் அவ் இரு உறுப்பினர்களும் ஆர்னோட்டின் நிலைப்பாட்டிற்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்திருந்த நிலையில் பதிவிகளைப் பறிப்பதற்கு தமிழரசுக் கட்சி முயன்றிருந்தமை தெரிந்ததே.இதேவேளை இந் நம்பிக்கையில்லாத் தீர்மான விடையத்தில் ஈபிடிபி அதிக முனைப்புக்காட்டிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றைய சபை அமர்பிலும் ஆர்னோல் வெற்றி பெற்று முதல்வராவதற்கு முக்கிய காரணமாக இருந்த ஈபிடிபியை ஆர்னோல்ட் கடுமையாக விமர்சித்திருந்ததோடு அதன் உறுப்பினரான சட்டத்தரணி றெமீடியசை தொடை நடுங்கி

என பலமுறை சபையில் கூறி ஆர்னோல்ட் அவரை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: