அம்பாறையில் ஆயுததாரிகள்! தேடுதலில் படையினர்!

அம்பாறையில் ஆயுததாரிகளைத் தேடித் தேடுதல் நடடிவக்கை படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை அம்பாறை மாவடத்தில் அமைந்துள்ள கருவாட்டுக்கல் என்ற பிரதேசதில் காணி உரிமையாளர் ஒருவர் தனது சொந்தக் காணியைப் பார்வையிடச் சென்றவேளை அக்காணில் இருவர் ஆயுதாங்கி நின்றுள்ளனர்.

காணிக்குள் நுழைந்தபோது அங்கு நடமாடிய இரு ஆயுததாரிகளும் ஏ.கே வகையான ரி-56 ரக துப்பாக்கியை வைத்திருந்துள்ளனர். அந்த இருவரும் காணி உரிமையாளரை அச்சுறுத்தி, சுட முற்பட்டதாகவும் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என காணி உரிமையாளர் அருகில் உள்ள இராணுவ முகாமில் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து அப்பகுதி முழுவதும் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஆயுததாரியும் கைது செய்யப்படவில்லை எனவும் எதுவித ஆயுதங்களும் மீட்கப்பட்வில்லை எனவும் படைத்தரப்பு கூறியுள்ளன

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: