கனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக!

கனடாவுக்கு சுற்றுலா சென்ற ஒரு இளம்ஜோடி பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சீரியல் கில்லர் ஒருவனிடம் சிக்கினார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மூத்த அவுஸ்திரேலிய பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகனான Lucas Fowler (23) மற்றும் அவரது காதலியான அமெரிக்காவைச் சேர்ந்த Chynna Deese (24) ஆகியோரின் உடல்கள், கனடாவின் நெடுஞ்சாலை 97இல், பிரபல சுற்றுலாத்தலமான Liard Hot Springsஇன் அருகில் கண்டெடுக்கப்பட்டன.

அதே இடத்தில் அவர்கள் பயணித்ததாக கருதப்படும் நீல நிற செவ்ரோலே வேன் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள் என்றாலும், அவர்களது உடல்கள் கண்ணாடியால் ஆன சவப்பெட்டியில் வைக்க முடியாத அளவுக்கு, மோசமாக காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Carrie Hawryluk தனது துணைவருடன் குறிப்பிட்ட அதே நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது அந்த ஜோடியைப் பார்த்ததாகவும், அவர்களது வேன் பழுது பட்டிருந்ததாகவும், உதவி வேண்டுமா என்று கேட்டபோது, Lucas, புன்னகையுடன் தான் சமாளித்துக் கொள்வேன் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விசாரணையில் கனேடிய பொலிசாருக்கு உதவுவதற்காக அவுஸ்திரேலிய பொலிசாரும் கனடா புறப்படுள்ளதோடு, Lucasஇன் குடும்பத்தாரும் அவரது உடலைக் கொண்டு வர கனடா புறப்பட்டுள்ளார்கள்.

அவ்வழியே சென்ற யாராகிலும் தங்கள் டேஷ் கேமில் ஏதேனும் பயனுள்ள விடயங்கள் பதிவாகியிருந்தால் கொடுத்து உதவுமாறு கனேடிய பொலிசார் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் அதே பகுதியில் இன்னொருவரும் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதையடுத்து, Lucasம் Chynnaவும் அப்பகுதியில் நடமாடும் சீரியல் கில்லர் ஒருவனிடம் சிக்கினார்களா என்னும் கேள்வியும் எழுந்துள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: