ஏர் பிரான்ஸ் விமானத்திற்குள் திடுதிப்பென நுழைந்த அழகிய இளம்பெண்கள்: பயணிகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!

ஷாங்காயிலிருந்து பாரீஸ் சென்று கொண்டிருந்த ஏர் பிரான்ஸ் விமானத்தில், பயணிகள் அமர்ந்திருந்த இடத்திற்குள் திடுதிப்பென நுழைந்த 10 இளம்பெண்கள், பயணிகளை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்கள்.

பயணிகள் எதிர்பாராத நேரத்தில், பிரபல பாடல் ஒன்றிற்கு அந்த இளம்பெண்கள் பாலே நடனம் ஆடினார்கள்.

எப்படி குறுகலான இடத்தில் பாலே நடனம் ஆடுவது என சிறப்பாக அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருக்க, அதற்கேற்றாற்போல் அருமையான ஒரு நடனம் ஆடி மக்களை திகைக்க வைத்தார்கள் அந்த இளம்பெண்கள்.

ஆசிய நாடுகளில் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தும் பாரீஸ் ஒபேரா பாலே குழுவினரை, ஜூன் மாதம் 21ஆம் திகதியிலிருந்து ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை, ஏர் பிரான்ஸ் விமானம்தான் ஒரு கூட்டாளியாக சுமந்து செல்கிறது.

அந்த ஆசிய பாலே சுற்றுலா நிகழ்ச்சியின் முடிவைக் கொண்டாடும் வகையில்தான், பாரீஸ் ஒபேரா பாலே குழுவினர் ஏர் பிரான்ஸ் விமானத்தில் தங்கள் நடனத்தை அரங்கேற்றி மக்களை குஷிப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியாகியுள்ள வீடியோவில், பயணிகளுக்கு அருகே அந்த அழகிய இளம்பெண்கள், இன்னும் அழகாக பாலே நடனம் ஆடுவதையும், ஆச்சரியத்தில் திளைத்துப்போன பயணிகள், நடனம் முடிந்ததும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி அவர்களை உற்சாகப்படுத்துவதையும் காணலாம்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: