நாடகம் பார்க்கும் ஆசையில் பெற்ற மகளை காமுகனுக்கு பலிகொடுத்த தாய் – தமிழ் நாட்டில் நடந்த கொடூரம்

நாடகம் பார்க்க 7வயது சிறுமியை தனியே விட்டு சென்றதால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள கிராமத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர், தனது 7 வயது மகளுடன் வசித்து வருகிறார். அந்த கிராமத்தில் மழை பெய்ய வேண்டி அர்ச்சுனன் தபசு என்ற நாடகம் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக அந்தச் சிறுமியின் தாய், உறங்கிக் கொண்டிருந்த தனது மகளை வீட்டு வாசலில் படுக்க வைத்தப்பின் சென்றுள்ளார்.

ஒரு மணி நேரம் கழித்து சிறுமி அழுதவாறே நாடகம் நடக்கும் இடத்திற்கு வந்துள்ளார்.

சிறுமியின் உடைகளில் ரத்தம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய், தனது மகளை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தொடர்ந்து அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர் மேலும், பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமியின் உடல் நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிறுமியைச் சீரழித்த காமுகனை பொலிசார் தேடி வருகின்றனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: