தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்த இளைஞர் – பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மோதியதை வீடியோ எடுத்து வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திராவில் சமீப காலமாக ரயில் தண்டவாளம் முன்பு காஸ் சிலிண்டர், பட்டாசு, பைக், சைக்கிள் போன்றவற்றை வைத்து அதன் மீது ரயில் மோதுவதை வீடியோவாக எடுத்து வெளியிடப்படு பலரது கவனத்தையும் ஈர்த்து வந்தது.

ஆபத்துடன் விளையாடும் இதுபோன்ற குற்றவாளிகளை பொலிசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் ஏர்பேடு அடுத்த சென்னூறு கிராமத்தை சேர்ந்த ராமிரெட்டி என்பவர் சிக்கியுள்ளார்.

பிடெக் பட்டதாரியான அவர் ஐதராபாத்தில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் யூ டியூப் சேனலில் ‘திரில்’ வீடியோக்களை வெளியிட்டு பணம் சம்பாதிக்க விபரீத வீடியோக்களை எடுத்து வந்துள்ளார்.

கடந்த ஜூன் 14 ஆம்ம் திகதி முதல் ஜூலை 27 ஆம் திகதி வரை 47 வீடியோக்களை யூ டியூப்பில் பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக ரயில் தண்டவாளத்தில் சைக்கிள் செயின்கள், காஸ் சிலிண்டர், பைக் போன்றவற்றை வைத்துவிட்டு, ரயில் வரும்போது அதனால் ஏற்படும் விளைவை உணராமல் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் யூ டியூப்பில் பார்வையாளர்கள் அதிகரித்து பணம் சம்பாதிக்க இவ்வாறு செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராமிரெட்டியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: