மின்சாரத்தை துண்டித்ததால் உத்தியோகத்தரை இரும்பு கம்பியால் தாக்கிய வீட்டினர்!

மின் கட்டணம் செலுத்தாத வீட்டின் மின்சார இணைப்பை துண்டித்ததால் மின்சாரசபை உத்தியோகத்தர் ஒருவர், கடுமையாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம்களுத்துறை, அகலவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மின் கட்டணம் செலுத்தாத வீட்டிற்கு சென்ற குறித்த உத்தியோகத்தரை, வீட்டு உரிமையாளர் அச்சுறுத்தியதை அடுத்து, அவர் உயரதிகாரிகளிற்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதன் பின்னர் குறித்த அதிகாரி வேறு சில அதிகாரிகளுடன் மீண்டும் அந்த வீட்டிற்கு சென்றபோது, வீட்டு உரிமையாளரும், மகனும் மின்சாரத்தை துண்டிக்க அனுமதிக்கவில்லை.

இதையடுத்து மேலதிக உத்தியோகத்தர்கள் அழைக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த வீட்டு உரிமையாளர் மின்சாரசபை அலுவலரை இரும்பு கம்பியால் நையப்புடைத்துள்ளார்.

இந்நிலையில் கடுமையான தக்குதலிற்கு உள்ளான அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் அகலவத்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: