பிரபல இயக்குநர் ராஜசேகர் காலமானார்!

பிரபல இயக்குநரும், நடிகருமான ராஜசேகர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

பாலைவனச் சோலை’ படத்தை இயக்கிய ராபர்ட்-ராஜசேகர் என்ற இரட்டையர் இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் ராஜசேகர் இன்று காலை ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார். இயக்குநராக மட்டுமில்லாமல் திரைப்பட நடிகராக, சின்னத்திரை நடிகராகவும் இருந்தார். சின்னத்திரை சங்கங்களில் பொறுப்பு வகித்தார்.

இயக்குநர் ராஜசேகர்

சமீப காலமாக உடல் நலம் சரியி்ல்லாமல் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். இந்த இரட்டையர் இயக்குநர்கள் ‘மனசுக்குள் மத்தாப்பூ’, ‘சின்னப்பூவே மெல்லப் பேசு’, ‘தூரம் அதிகமில்லை’, ‘பறவைகள் பலவிதம்’, ‘தூரத்துப் பச்சை’, ‘கல்யாணக் காலம்’ உள்பட பல படங்களை இயக்கியுள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: