காணிகள் சுவீகரிக்கப்பட்டால் கூட்டமைப்பு தட்டிக்கேட்கும்!

பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்படுவதென்பது வரவேற்கத்தக்க விடயமாகும். அதனால் பெரும் அபிவிருத்திக்கான வாய்ப்பு அங்கு உருவாகும். எனினும் இவ்விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதாகவோ அல்லது மக்களுக்கு எவ்விதத்திலேனும் இடையூறு ஏற்படுத்தப்படுவதாக அறிந்தால் கூட்டமைப்பு நிச்சயம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

உண்மையில் பலாலி விமான நிலையம் புனரமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்படுவதென்பது வரவேற்கத்தக்க விடயமாகும். அதனால் பெரும் அபிவிருத்திக்கான வாய்ப்பு அங்கு உருவாகும்.

எனினும் அது மக்களுக்குப் பாதிப்புக்களையும், இடைஞ்சலையும் ஏற்படுத்துமாக இருந்தால் கூட்டமைப்பு அதனைத் தட்டிக்கேட்கும். ஏற்கனவே விமான நிலைய அபிவிருத்திப் பணிகளின் போது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டிருக்குமாக இருந்தால், தமது காணிகளை மீளப் பெற்றுத்தருமாறுகோரி அல்லது இழப்பீடுகளைப் பெற்றுத்தருமாறு போராட்டங்களை நடத்தியிருக்கும். எனினும் இவ்விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக மக்களுக்கு எவ்விதத்திலேனும் இடையூறு ஏற்படுத்தப்படுவதாக அறிந்தால் கூட்டமைப்பு நிச்சயம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: