இணையத்தில் வைரலான வீடியோ…. அவமானம் தாங்காமல் இளம்பெண் எடுத்த முடிவு

நாமக்கல் மாவட்டத்தில் இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் அந்த பெண் குறித்த ஆபாச வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவியுள்ளது.

இதனை தெரிந்துகொண்ட அந்த இளம்பெண் அவமானம் தாங்காமல் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவரை பத்திரமாக காற்றிய பெற்றோர் ஆறுதல் கூறி, வீடியோவை இணையத்தில் பரப்பிய வரதராஜன், விஜயகுமார், சங்கர் ஆகியோர் மீது பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

விவகாரம் பொலிஸ் நிலையம் வரை சென்றால் தன்னுடைய பெயர் கெட்டுவிட்டது என நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு அந்த பெண் மீண்டும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்மந்தப்பட்ட பெண் கல்லூரி படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒருநாள் காதலருடன் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்துள்ளார். அதே பேருந்தில் பயணித்த வரதராஜன், வீடியோவாக எடுத்து பெற்றோரிடம் காட்டிவிடுவேன் என இளம்பெண்ணை மிரட்டியுள்ளார்.

மேலும், வாட்ஸ் ஆப் வீடியோ காலில் பேச வேண்டும் எனவும் வற்புறுத்தியுள்ளார். அதற்கு இணங்கிய அந்த இளம்பெண் தினமும் வீடியோ காலில் பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வீடியோ காலில் ஆடைகளை களையுமாறு வரதராஜன் மிரட்டியுள்ளார்.

வேறு வழியில்லாமல் அந்த பெண்ணும் கல்லூரியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் ஆடைகளை களைந்து வீடியோ காலில் வந்துள்ளார். இதனை பதிவு செய்துகொண்ட வரதராஜன், தன்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

அன்றிலிருந்து அந்த பெண் வரதராஜனிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார். இந்த சமயத்தில் தான், வரதராஜன், இளம்பெண் கல்லூரிக்கு சென்றுவரும் பேருந்தின் ஓட்டுனர் விஜயகுமார் என்பவனிடம் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அவர் அவருடைய நண்பருக்கு பகிர்ந்துள்ளார். இவ்வாறாக வீடியோ வெளியில் பரவியிருக்கிறது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பொலிஸார், கல்லூரி பேருந்து ஓட்டுநர் விஜயகுமார், சங்கர் ஆகியோரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள வரதராஜனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: