திருமணமான அன்றே மனைவியை அவமதித்த கணவனின் மோசமான செயல்: ஒரு சர்ச்சை புகைப்படம்!

அமெரிக்காவில் திருமணமான அன்றே தனது மனைவியை அவமதிக்கும் விதமாக கணவன் செய்த ஒரு செயலைக் காட்டும் ஒரு புகைப்படம் சமூக ஊடகம் ஒன்றில் வெளியாகி விமர்சனத்துக்குள்ளாகியது.

அந்த புகைப்படத்தில், ஒரு கணவன் திருமண உடையிலிருக்கும் தனது மனைவியின் உடையின் தொங்கலை எடுத்து தனது காரை துடைக்கிறார்.

அது காலம் காலமாக நினைவில் கொள்ள வேண்டிய ஒரு நிகழ்வு, அதை இந்த நபர் கெடுத்துவிட்டாரே என விமர்சித்துள்ளார்கள் அந்த படத்தை பார்த்தவர்கள்.

சட்டென 400 பேருக்கும் மேலானோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய, 350க்கும் மேலானோர் லைக் செய்ய, வைரலானது அந்த புகைப்படம்.

காரை விரும்பும் ஒரு நபரை திருமணம் செய்துகொண்டால் இப்படித்தான் என ஒருவர் கமெண்ட் செய்ய, மற்றொருவர் என் மனம் வலிக்கிறது, அந்த உடை எவ்வளவு முக்கியமான ஒரு தருணத்தை நினைவூட்டும் உடை, அதை வைத்து கார் டயரை துடைக்கிறாயே என கோபத்துடன் விமர்சித்திருந்தார்.

இது இப்படியிருக்க, மற்றொரு பக்கம் சிலர், இது சும்மா வேடிக்கைக்காக செய்யப்பட்ட செயல், காரை விரும்புவோருக்காக நகைச்சுவையாக அந்த புகைப்படம் வேடிக்கையாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள்.

ஒரு பெண், என் கணவரும் இப்படித்தான் செய்வார், அது வேடிக்கை என்றுதான் அவர் நினைப்பார் என்று கூற இன்னொருவர், அது உண்மையிலேயே அழகான கார்தான், அந்த உடையைவிட அவர்கள் அதைத்தான் அதிகம் பயன்படுத்தப்போகிறார்கள் என்கிறார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: