பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிங்களத்தில் பேசிய தர்ஷன்~ குழம்பிப்போன ஷெரின்

இந்தியா மட்டுமல்லாது உலகளவில் பிரபல்யமான நிகழ்ச்சியாக தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது.

அதிலும் இந்த முறை இலங்கைத் தமிழர்கள் இருவர் (லொஸ்லியா, தர்ஷன்) ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதனால் இலங்கையிலும் இந்த நிகழ்ச்சி அனைவராலும் விருப்பத்துடன் பார்க்கப்படுகின்றது.

அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியின் போது ஒரு சம்பவம் நடத்துள்ளது.

பிக் பாஸ் இல் இருக்கும் சக போட்டியாளர்களுக்கு சிங்களம் தெரியாது. இலங்கையிலிருந்து சென்றவர்களுக்கே தெரியும்.

இந்த நிலையில் தர்ஷன் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிங்களத்தில் சேியுள்ளார். இதை புரிந்து கொள்ள முடியாத ஷெரின் குழம்பிப்போயுள்ளார்.

‘எல்லாத்தையும் ஒன்னு விடாமல் சுத்தம் பண்ணு. நேரத்தை வீணாக்காதே. நீ என்ன லூசா. சீக்கிரம் சுத்தம் பண்ணு” என சிங்களத்தில் திட்டினார்.

எதுவும் புரியாததால் ஷெரின் கோபத்துடன் “என்ன மொழியில பேசிட்டு இருக்க என்கிட்ட?” என கேட்டார்.

அதை கேட்டு லாஸ்லியா விழுந்து விழுந்து சிரித்தார். “ஷெரின் உன்னை சிங்களத்தில் திட்டுறான்” என்று லொஸ்லியா கூறிவிட்டு சிரித்தார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: