ஜமால் கஷோக்கியின் மரணத்திற்கு நானே பொறுப்பு – சவுதி பட்டத்து இளவரசர்

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் மரணத்திற்கு நானே பொறுப்பு என சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜமால் கஷோக்கி கடந்த ஒக்டோபர் 2ஆம் திகதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்திற்கு சென்றபொழுது கொல்லப்பட்டார்.

இதற்கு சவுதி அரேபிய இளவரசர் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனை சவுதி அரேபியா மறுத்து வந்தது.

கஷோக்கி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார் என துருக்கி அதிபர் எர்டோகன் குற்றஞ்சாட்டினார்.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்ததன் பின்னர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டமையினை சவுதி அரேபிய அரசு ஒப்புக்கொண்டது. இச்சம்பவம் சவுதி அரேபியாவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டது மிகப்பெரிய தவறுதான். அதே நேரம் இதில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை என சவுதி அரேபியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையிலேயே ஜமால் கஷோக்கியின் மரணத்திற்கு தானே பொறுப்பு என சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: