குடும்ப கௌரவத்திற்காக அழகியை கொன்ற அண்ணனிற்கு ஆயுள் தண்டனை!

பாகிஸ்தானில் கௌரவ கொலை புரியப்பட்ட பிரபல மொடல் குவான்டீல் பலூச்சின் சகோதரர் முகமது வசீமுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் ஏனைய சந்தேகநபர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

“நியாயமான சந்தேகத்தின் அப்பால் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. தனது சகோதரி காண்டீல் பலூச்சினை கொலை செய்தது முகமது வசீம் என்பதற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது“ என நீதிபதி குறிப்பிட்டார்.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மதகுருவும் விடுவிக்கப்பட்டார். அவரை நீதிமன்றத்திற்கு வெளியில் பூங்கொத்து கொடுத்து ஆதரவாளர்கள் வரவேற்றனர்.

கடந்த 2016ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை ரி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தின் போது பிரபலமானவர் பாகிஸ்தான் நடிகை மற்றும் மொடலான குவான்டீல் பலூச்.

அந்த போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தால் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக அவர் பதிவிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, அவரை இணைய பிரபலமாகியது. மேலும், போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அப்ரிடி என்ன சொன்னாலும் அதை நான் செய்வேன் எனவும் அந்த வீடியோவில் குவான்டீல் பலூச் அறிவித்திருந்தார். அவரின் இந்த வீடியோவுக்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், 2016 ஜூலை 15 அன்று, அவரது வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டதில், சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் வீடியோக்களையும் வெளியிட்டு குடும்ப கௌரவத்தை சீர்குலைத்ததால் கழுத்தை நெறித்து, அவரை கொன்று விட்டதாக குவான்டீல் பலூச்சின் சகோதரர் முஹம்மது வாசிம் வாக்குமூலம் அளித்தார். அவரது வீடியோ பலூச் சமூகத்தின் மதிப்பை கெடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், குவான்டீல் பலூச்சின் சகோதரர் முஹம்மது வாசிமுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: