19 வயது மனைவியை தனியாக விட்டு வெளிநாட்டுக்கு சென்ற கணவன்.. பின்னர் நடந்த விபரீத சம்பவத்தில் திருப்பம்

கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில் டிக்டாக் மோகத்தில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண் மகளிர் தங்கும் விடுதியில் இருந்து மாயமாகியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் லியோ. இவருக்கும் வினிதா (19) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்த நிலையில் திருமணமான 45 நாட்களில் வேலைக்காக லியோ சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் டிக்டாக் வீடியோ மூலம் வினிதாவுக்கு அபி என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் சேர்ந்து டிக்டாக் செய்து நெருக்கமானதில், வினிதா தனது கையில் அபியின் படத்தை டாட்டூ குத்தியுள்ளார்.

இதை வீடியோவில் பார்த்து அதிர்ச்சியடைந்த லியோ உடனடியாக சொந்த ஊருக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த 20 பவுன் நகைகளுடன் வினிதா மாயமானார்.

இதனிடையில் அவர் பொலிசில் சரணடைந்த நிலையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அபி மற்றும் இன்னொரு தோழி சரண்யாவையும் கைது செய்து விசாரித்தனர்.

இந்நிலையில் பொலிசாரிடம் இருந்த வினிதா தனது தாய் மற்றும் கணவருடன் செல்ல மறுத்ததால் அவரை காரைக்குடியில் உள்ள மகளிர் இல்லத்தில் தங்க வைத்தனர்.

ஆனால் வினிதா தங்கியிருந்த மகளிர் இல்லத்தில் இருந்து அவர் தற்போது மாயமாகியுள்ளார்.

இதையடுத்து விடுதி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பொலிசார் வினிதாவை தேடி வருகின்றனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: