வெளி நாட்டில் நிர்க்கதியான நிலையில் சிக்கித் தவித்த இலங்கைக் குடும்பத்திற்கு கிடைத்த விமோசனம்

மத்திய கிழக்கு நாடு ஒன்றில் கடன் சுமையால் பல வருடங்கள் அறை ஒன்றுக்குள் முடங்கியிருந்த இலங்கை குடும்பத்திற்கு விமோசனம் கிடைத்துள்ளது.டுபாயில் கடன் சுமையினால் அறை ஒன்றுக்குள் இருந்து வெளியேற முடியாமல் முடங்கிய, இலங்கை குடும்பத்தினர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.ஐக்கிய அரபு எமிரேட் மக்களின் தாராள மனப்பான்மையினால் இந்த குடும்பத்திற்கு செய்தே உதவியே அவர்கள் நாடு திரும்ப காரணம் என அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.கடந்த 24 ஆம் திகதி இஷாரா விஜேதுங்க மற்றும் அவரது இரண்டு மகன்களும் மீண்டும் இலங்கை வந்துள்ளனர்.

இலங்கை குடும்பத்தின் டுபாய் விசா காலாவதி மற்றும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக ஒருபோதும் பாடசாலைக்கு செல்லாத இரண்டு மகன்களுக்கு இப்போது இலங்கையில் உள்ள ஒரு பாடசாலையில் இணைக்கப்படவுள்ளனர்.எங்களுக்கு போதுமான உதவி செய்த மக்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன் என தெரியவில்லை. என் மனைவியும் பிள்ளைகளும் நாட்டுக்கு திரும்பிச் செல்வதைப் பார்ப்பதற்கு நிம்மதியாக உள்ளது’ என இஷாரா விஜேதுங்கவின் கணவர் MOHMMAD FEHRAT SINKAYA ABBAS தெரிவித்துள்ளார்.

இன்னும், சில கடன்கள் தீர்க்க உள்ளமையினால் அதனை தீர்த்த பின்னர் கணவனும் விரைவில் இலங்கையிலுள்ள அவரது குடும்பத்தில் சேர வாய்ப்புள்ளதென கூறப்படுகின்றது.MOHMMAD FEHRAT SINKAYA ABBAS 2008ஆம் ஆண்டில் இருந்து டுபாய் தனியார் நிறுவனம் ஒன்றில் சேவை செய்த நிலையில் 2016ஆம் ஆண்டு அவர் தனது தொழிலை இழந்துள்ளார்.அவர், தனது மனைவியுடன் இணைந்து பல்வேறு வர்த்தகங்களை மேற்கொண்டுள்ளனர். எனினும் அவர்களால் இலாபத்தினைப் பெற முடியாமல் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளனர். இந்நிலையில், வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமல் போயுள்ளமையினால் இலங்கைக்கு செல்ல அவர்களுக்கு எமீர் அரசாங்கம் தடை விதித்துள்ளது.இவர்கள் தொடர்பான செய்திகள் இணையத்தில் வெளியாகிய நிலையில், இலங்கை உதவி நலச் சங்கம் மற்றும் அந்த நாட்டு மக்களின் உதவியுடன் அவர்களது பாரிய கடன் சுமை தீர்க்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: