கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்!

தூத்துக்குடி துறைமுகத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துடன் காற்று மற்றும் சூரியசக்தி மின் உற்பத்தி திட்டத்தை தொடங்க ஆயத்தப் பணி நடைபெற்று வருகிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் 34-வது பட்டமளிப்பு விழா அண்ணா அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பல்கலைக்கழக அளவில் சிறப் பிடம் பிடித்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். முன்னதாக, அவர் விஐடி வளாகத் தில் 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.300 கோடி மதிப்பில் ‘பியர்ல் ஆராய்ச்சி பூங்கா’ கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் வேந்தர் கோ.விசுவ நாதன் பேசும்போது, ‘‘இந்தியாவில் சிறந்த தனியார் பல்கலைக் கழகங் களில் முதல் 10 இடங்களில் விஐடி இருக்கிறது. ஆராய்ச்சிக் கல்வியில் விஐடி பல்கலைக்கழகம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் முன்னணி யில் உள்ளது’’ என்றார்.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசும்போது, ‘‘நாட் டின் வளர்ச்சி 20-24 சதவீதம் உற்பத் தித் துறையிலும், 50-54 சதவீதம் சேவைத் துறையிலும் 8 சதவீதம் வேளாண் துறையின் பங்களிப்பாக இருக்கிறது. ஆனால், 65 சதவீதம் மக்கள் வேளாண் துறையில் பணியாற்றி வருகின்றனர்.

தமிழகத்துக்காக ஒரு திட்டத்தை நான் தயார் செய்துள்ளேன். குஜராத் மாநிலத்தில் உள்ள கண்ட்லா துறை முகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு 3 ஆயிரம் மெகா வாட், காற்று மற்றும் சூரியசக்தி மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.30 வரை விற்பனை செய்யப் படும். இந்தத் திட்டம் தூத்துக்குடி, பாரதீப், கண்ட்லா துறைமுகங்களில் செயல்படுத்தப்படுவதுடன் கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் செயல் படுத்தப்படும். இதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன.

கோதாவரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. இதை உபயோகமாக பயன்படுத்த மாநில முதல்வர்களை அழைத்துப் பேசினேன். எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடும் என் றேன். ஆனால், கர்நாடகம் தமிழ்நாடு இடையிலான பிரச்சினையை மட்டும் தீர்க்க முடியவில்லை. வலிமையான அரசியல் தலைமை வழிநடத்தினால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்’’ என்றார்.

கவுரவ விருந்தினராக விப்ரோ நிறுவன திறனாளர்களை கண்ட றியும் பிரிவின் தலைமை அதிகாரி விஸ்வாஸ் தீப் பங்கேற்றார். விஐடி துணை தலைவர்கள் சங்கர் விசு வநாதன், சேகர் விசுவநாதன், ஜிவி.செல்வம், செயல் இயக்குநர் சந்தியா பெண்ட்ட ரெட்டி, உதவி துணை தலைவர் காதம்பரி விவநாதன் பங்கேற்றனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: