தமிழருடைய சிவனொலிபாதமலை என்ன ஞானசாரரின் உடமையா.?

இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களும் பௌத்த பிரதேசமாக பிரகடனப்படுத்தும் தீர்மானத்தை பொதுபல சேனா நிறைவேற்றியுள்ளது.

அத்துடன், ‘உரிமைக்கு உரிமை” என்ற கட்சியையும் பொதுபல சேனா நேற்று ஆரம்பித்துள்ளது.

பொரலஸ்கமுவ பகுதியில் நேற்று நடைபெற்ற மாநாடொன்றிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையிலுள்ள அனைத்து மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதான பௌத்த பிக்குகள் கலந்து கொண்ட மாநாட்டில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் உரை நிகழ்த்தினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து இதுவரை தீர்மானமொன்று எட்டப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீபாத என்பது சிவனொலிபாதமலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்துள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர், ஸ்ரீபாத என்ற பெயர் மீண்டும் வைக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: