ஓடும் பஸ்ஸில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த கண்டக்டர்!

நடுராத்திரி.. பஸ்ஸில் தூங்கி கொண்டிருந்த இளம் பெண்ணிடம் பாலியல் தொல்லை தந்துள்ளார் கண்டக்டர் ஒருவர்! இதையடுத்து, அந்த அரசு பஸ் கண்டக்டரை, சம்பந்தப்பட்ட பெண் பளார் என ஒரு அறைவிட்டு, போலீஸ் ஸ்டேஷனிலேயே கொண்டு வந்து உட்கார வைத்துவிட்டார்!

சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. 28 வயதாகிறது. சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் சேவகியாக இருக்கிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு கோயம்பேட்டிலிருந்து கும்பகோணம் வழியாக மன்னார்குடி நோக்கிச் சென்ற அரசு பஸ்ஸில் ஏறி உள்ளார்.

நடு இரவில் நன்றாக அசந்து தூங்கிவிட்டார். அப்போது யாரோ தன்னை தொடுவது போல உணர்வது, திடீரென தமிழ்செல்வி கண்விழித்து கொண்டார்.

அப்போது, கண்டக்டர் ராஜூ, பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டு, பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில், தமிழ்செல்வியை பிடித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த தமிழ்செல்வி, கண்டக்டரின் கன்னத்தில் அறைந்திருக்கிறார். இதனால் மிகப்பெரிய பரபரப்பு அங்கு ஏற்பட்டது.

பின்னர், கும்பகோணம் பஸ் ஸ்டேண்டில் இறங்கிய பிறகும், தமிழ்ச்செல்வி கண்டக்டர் ராஜுவிடம் வாக்குவாதம் செய்தார். அதற்கு ராஜு, “உனக்கு வேணும்னா ஸ்டேஷனில் போய் புகார் தந்துக்கோ” என்று அலட்சியமாக பதில் சொல்லி உள்ளார்.

ராமநாதபுரத்தில் இதே போன்று ஓடும் பஸ்ஸில் பெண்களிடம் ராஜு ஏற்கனவே தவறாக நடந்து கொண்டு, அதற்காக சஸ்பெண்டும் செய்யப்பட்டாராம். அந்த சஸ்பெண்ட் முடிந்து இப்போதுதான் வேலைக்கு திரும்பி இருக்கிறார் ராஜு. திரும்பவும் அடுத்த புகார் கிளம்பி உள்ளது. இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: