மகளை பின்தொடர்ந்து சில்மிஷம் செய்த இளைஞரை வெட்டி வீசிய தந்தை!

மகளை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இளைஞரை, ஆத்திரமடைந்த தந்தை வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குட்டி. இவருடைய மகள் அருகாமையில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார்.

இவரை ஒருதலையாக காதலித்து வந்த 21 வயதான கண்ணன் என்கிற இளைஞர் தினமும் பின்தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி, நடந்தவை குறித்து தன்னுடைய தந்தையிடம் கூறியுள்ளார். உடனே ஜெயக்குட்டி கண்ணனின் தாயாரை சந்தித்து, மகனை கண்டிக்குமாறு கூறிவிட்டு திரும்பியுள்ளார்.

அப்படி இருந்தும் கூட கண்ணன் மீண்டும் பின்தொடர ஆரம்பித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அவர் நேரடியாக கண்ணனை சந்தித்து எச்சரித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கோபம் அதிகரித்ததால் ஜெயக்குட்டி மறைத்து வைத்திருந்த அரிவாளால், சரமாரியாக கண்ணனை வெட்டிக்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அறிந்த வந்த பொலிஸார், கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஜெய்குட்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: