தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரிதாபமாக பறிபோன முதிவரின் உயிர்!

தற்கொலை செய்துகொள்வதற்காக 18 வது மாடியிலிருந்து குதித்த பெண், கீழே நின்றுகொண்டிருந்த முதியவர் மீது விழுந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்

குஜராத் மாநிலத்தை சேர்ந்த மம்தா ஹன்ஸ்ராஜ் ரதி (30) என்கிற பெண் கடந்த சில தினங்களாகவே தன்னுடைய சகோதரன் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

பல்வேறு நோய்களால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளான மம்தா, நேற்று காலை தற்கொலை செய்துகொள்வதாக 18வது மாடியிலிருந்து குதித்துள்ளார்.

அந்த நேரத்தில் தரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பாலு காமித் (69) என்கிற நபரின் தலையில் வேகமாக வந்து விழுந்ததால், சம்பவ இடத்திலேயே, மம்தாவுடன் சேர்ந்து அவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: