கர்வத்தால் முடங்கிய வடிவேலுவின் சினிமா வாழ்க்கை,வடிவேலின் படத்தை தட்டிப்பறித்த யோகிபாபு,

நடிகர் வடிவேலு தமிழ் சினிமா உலகில் ஈடு இணையற்ற நகைச்சுவை நடிகர். சமீபத்தில் கூட வடிவேலுவின் நேசமணி ஹேஷ்டேக் ட்விட்டரில் உலகம் முழுவதும் பரவியது. வடிவேல் என்று சொன்னால் உலகம் முழுவதும் அறியப்பட்டவர் என்று சொல்லும் அளவிற்கு அவர் காமெடியில் கொடி கட்டி பறந்தார்.

இவர் இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பேய் மாமா என்ற படத்தில் வைகைப்புயல் நடிப்பதாக இருந்ததுய. அந்த படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியான வேளையில் தமிழ் சினிமாவின் ரசிகர்களும், நடிகர் வடிவேலுவின் ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனா். இப்பொழுது அவர்களுக்கு ஏமாற்றமாக இந்தப் படத்தில் நடிகர் வடிவேலுக்கு பதிலாக, தற்போது தமிழ் சினிமாவில் காமெடியில் உச்சத்தில் இருக்கும் நடிகர் யோகிபாபு நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

அவர் திரையுலகில் நடித்து பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும், இணையதளத்தில் தினமும் அவரை வைத்து தான் மீம்ஸ் வரும் அவர் இல்லை என்றால் மீம்ஸ்களே சமூகவலைதளத்தில் இல்லை என்று சொல்லலாம். அவ்வாறு தமிழகத்தின் மக்கள் மனதில் காமெடி மூலம் ஆட்சி நடத்தியவர் வைகைப்புயல் வடிவேலு.

யோகி பாபு தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஆனால் வடிவேலுக்கு பதிலாக இயக்குனர் ஏன் யோகிபாபுவை தேர்வு செய்தார் என்று சரியான தகவல் தெரியவில்லை. பல நாட்களுக்குப் பிறகு வைகை புயலை திரையில் பார்க்கலாம் என்ற தனிமனித தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றம் என்றே சொல்லலாம்.

என்னதான் திறமை இருந்தாலும் கூட நடிக்கும் சக கலைஞர்கள் மற்றும் இயக்குனர்களை மதிக்க வேண்டும் என்ற பண்பு சிறிதும் தெரியாதவர் வைகை புயல் வடிவேலு. அதற்கு சமீபத்தில் ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியே உதாரணம். அதில் இயக்குநர் சிம்புதேவனை உரிமையில்லை திட்டி இருப்பாா்.

தல அஜித் அவர்களுடன் ராஜா படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தலையையே மதிக்காமல் அவர் நடந்து கொண்டதும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் கேப்டன் விஜயகாந்துக்கு இவருக்கும் இருந்த தனிப்பட்ட பிரச்சினையை அரசியலில் இறங்கி எந்த அளவுக்கு தனிநபர் விமர்சனம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்தவர். தனி மனித பண்பு நாகரிகம் பற்றி அவர் இன்னும் தெரியாமல் இருப்பதற்கு தகுந்த பாடம் தான் வடிவேலுவை சினிமாவில் இருந்து ஒட்டுமொத்தமாக அகற்றியது என்று கூட கூறலாம்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: