யாழ் இந்து ஆரம்ப பாடசாலையில் உயர் புள்ளி பெற்ற ஆருஷனின் எதிர்கால இலட்சியம்

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோகநாதன் ஆருஷன், 2019ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் யாழில் சாதனை படைத்த குறித்த மாணவன் மேலும் தெரிவிக்கையில், “தந்தை, தாய் இருவரும் மருத்துவர்கள். அவர்களின் வழியில் தானும் மருத்துவராக வந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை கடந்த கால வினாத்தாள்களை செய்துகொள்ளுவன். புரியாதவற்றை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வேன்

பாடசாலையில் கற்பிக்கும் பாடங்களை அன்றைய தினமே மீளக் கற்றுக்கொள்வேன். இதுவே எனது சிறந்த பெறுபேற்றுக் காரணமாக அமைந்தவை. என்னை வழிப்படுத்திய பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகள்” என்று மாணவன் ஆருஷன் தெரிவித்தார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: